Tuesday, 22 December 2020

Friday, 11 December 2020

ஆரம்பம்

தேடித் திரிகிறேன்
விழியில் விழுந்த பள்ளி
விரல் கோர்த்த வீதி
உடைகள் உரசிய பேருந்து நெரிசல்
கூந்தல் தீண்டிய சாளரம்
சேர்ந்து பார்த்த திருவிழா
ஒன்றாய் உண்ட உணவகம்
தேடித் திரிகிறேன்
எங்கே தொடங்கியது
நம் பிரிவின்
ஆரம்பப்புள்ளி.

Miss you

நினைவுகள்

அத்தனை
அழகிய நினைவுகளை
கொடுத்துவிட்டு
நீயும் ஏனடி
நினைவாகவேச் சென்றாய்

Thursday, 10 December 2020

உந்தன்‌ அழகில்

அதிகம் கண்ணாடி பார்க்காதே
அதுவும் கவிதை 
எழுதிவிடப் போகிறது
உந்தன் அழகில்

Friday, 4 December 2020

அப்பா



எதிரே இருந்தது
கடந்து செல்லும் போதும்
கால்நீட்டி அமர்ந்த போதும்
துள்ளி விளையாடிய போதும்
துயில் கொண்ட போதும்
நோய்வாய்ப்பட்ட போதும்
திமிராய் திரிந்த போதும்
முற்படவேயில்லை 
கொஞ்சமேனும் படித்திட
அப்பாவெனும் புத்தகத்தை

Saturday, 29 August 2020

நிரூபணம்

இருப்பை நிரூபிக்க
கவிதை எழுதுகிறேன்
இறந்து விட்டதாய் 
எழுதி விடுவதற்குள்

Wednesday, 29 April 2020

மறந்து போகும்

பொள்ளாச்சி போல்
நாகர்கோவிலும் மறந்து போகும்

Wednesday, 15 April 2020

இரவுகள்

இரவுக்கும் பகலுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
இந்த மனம் அலைவது
ஏன் உனக்கு புரிவதேயில்லை

where did things go wrong?

Sunday, 12 April 2020

உன்னைப் போல

கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்து கொண்டிருக்கிறது
என் கவிதைகளும்
உன்னைப் போல

Tuesday, 7 April 2020

ஒருமுறை

ஒருமுறையேனும் சொல்லலாமே
இவ்வாழ்வு என்னுடனென்று
வானவில்லாய் வந்து அடைமழையாய் செல்கிறாய்
வெள்ளத்தின்‌ சேதாரம் நீயறிவாயோ?

Monday, 6 April 2020

மீண்டும்

மறுபடியும் அதே தனிமை
உறக்கமில்லா இரவுகள்
கடந்த நினைவுகள்

தென்றலுக்கு செவி சாய்க்கும் மரங்கள்
காயப்போட்ட சட்டையின் வடிந்து கொண்டிருந்த கடைசித்துளி

ரீங்காரமிடும் கொசு
காலையைத் தேடி பயணப்படும் கடிகாரம்
இரவின் அமைதியை கிழிக்கும்
ஒன்றிரண்டு வாகனங்கள்

நீயிட்ட கடைசி முத்தத்தின் ஈரம்

நானும் அவளும்

என்னவளாய் அவளும்
அவளவனாய் நானும்

Monday, 30 March 2020

ஜே ஜே

தேடிக் கிடைப்பதில்லை 
என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று 
மெய் தேடல் தொடங்கியது

Friday, 13 March 2020

யாதும் காதலாய் வேண்டும்

யாதும் காதலாய் வேண்டும்
நீ
நான்
நாம்
எங்கு திரும்பினும் காதலாய் வேண்டும்
சில பல சண்டைகளும் காதலாய் வேண்டும்
விழி வழி பேசும் காதலாய் வேண்டும்
வழிநெடுக பேசும் காதலாய் வேண்டும்
மௌனத்திலும் காதல் வேண்டும்

Thursday, 5 March 2020

அலைபாயுதே

நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்


என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

Tuesday, 3 March 2020

இன்பமென்பது

இரக்கமில்லா இரவுகளில்
இன்பமென்பது பதில் பேசா
உன் நினைவுகளோடு உரையாடுவது

Monday, 13 January 2020

நான்‌ யார்.?

நான்‌ யார்.?
ஒவ்வொரு முறையும்
தோல்வியின் மேலே
அமர்ந்து அழகு பார்த்தவன்

காரணங்கள் தேடி பயணப்பட்டு
அதில்லை இதில்லை
என்றெண்ணி மீண்டும் சிம்மாசனமிட்டேன்
தோல்வியின் மீதே

என் வழியில் கண்ட
முள்ளுக்கு காக்கையை 
காரணம் கட்டி அசையாதிருந்தேன்
காலம் அப்படியன்று 
சுழன்று கொண்டேயிருந்தது

அருகே செல்பவன் 
கால்களை பார்த்து பொறாமைபட்டவன்
அவன் எதிர்கொண்ட முட்புதரைப் பார்க்கவேயில்லை

எதிர்பாரா தருணமொன்றில்
தேவதையாய் வந்திறங்கியவள்
அழகாய் சொல்லிச் சென்றாள்
உனக்கும் இரண்டு கைகளுண்டென..

ஆம் சொல்லிச் சென்றாள்




Wednesday, 8 January 2020

நீயறிவாயா?

நீயறிவாயா?
*******************

யாரிடமும் கேட்க வேண்டி‌யதில்லை
பழக்கப்பட்ட வழி தான்

எப்போதும் புன்னகைக்கும்
அந்த அண்ணனின் கடை திறந்திருந்ததா?

யாரிடமோ சத்தமாய் பேசும்
அந்த மாமா இன்று பேசிக்கொண்டிருந்தாரா?

உணவகத்தில் வேலையாளை அதட்டும்
அந்த முரட்டு முதலாளி இன்றிருந்தாரா?

வழக்கமாய் பூத்திருக்கும்
அந்த முதல் வீட்டு செம்பருத்தி இன்று பூத்திருந்ததா?

காலடி சத்தம் கேட்டதுமே குரைக்கும்
அந்த மூன்றாவது வீட்டு நாய் இன்று குரைத்ததா?

எதிரே சட்டென்று நிறுத்தி
அந்த ஓட்டுநர் திட்டும் வரை 
ஏதும் நினைவில் இல்லை
உன்னைத் தவிர

Monday, 6 January 2020

தேடல்

சுற்றி இருப்பதெல்லாம் 
விருப்பம் போல சுழன்று கொண்டிருக்க
விருப்பமின்றி மனம் தனித்திருக்கிறதே

எட்டும்‌ தூரத்தில் நீயில்லையே
கட்டியணைத்து சரிசெய்திருப்பேனே
உடைந்த நம்‌ இதயத்தை

மிச்சமிருந்த எச்ச நம்பிக்கையும்
சுக்கு நூறாகிறதே
உச்சென்ற உன் சுழிப்பிலே

எத்தனை தொலைவு செல்கிறேனோ
அத்தனை கனத்த இதயத்துடன் திரிகிறேன்
நீயில்லா உலகில்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு

வார்த்தைகள்  உணர்த்திடாது
என்‌ வலியை
வழித்தடம் தெரியாமல் கரைபுரளும்
கண்ணீர் தெரியும் தொலைவிலும் நீயில்லை

நினைவில் இருப்பதெல்லாம் ஒன்றே
 நீ மட்டுமே 
இத்தேடலின் முடிவு
நீயும் நினைவில் கொள்ளடி 

Sunday, 5 January 2020

வாய்ப்பு

ஒவ்வொரு வாய்ப்பிலும்
நீ கொண்ட நம்பிக்கையை  உடைத்து
இன்னும் தூரம் சென்று கொண்டேயிருக்கிறேன்

Saturday, 4 January 2020

என்னின் தவறுகள்

ஒவ்வொரு முறையும்
அவள் தேடி வரும் போது
என்னின் குறைகளெல்லாம்
இன்னும் தூரமாக்குகிறது
எங்களுக்கான இடைவெளியை

Wednesday, 1 January 2020

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

முடிவில்லா தேடலில்
முடிவாய் உன்னைத் தேடியே
இவ்வாண்டும்

Happy Birthday

 நினைவுப் பெட்டகம் நிரம்பி வழிய அடுக்கடுக்காய்  வந்து சேரட்டும் பேரழகியின் நாட்குறிப்பில்  பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள் இன்று போல் என்றென்றும...