Friday, 30 June 2017

You are Beauty Dear

அழகு

அழகுக்கு ஆயிரமாயிரம் கவிதைகள்
உன்னைக் காணமலே
வடித்துவிட்டனர் கவிகள்
இன்னும் எத்தனை
உன்னைக் கண்டிருந்தால்...?

Beauty

Thousands of poems for beauty
Before seeing you
They wrote
How many more
If they see you...?

Monday, 26 June 2017

How?

எப்படி..?

எப்படி புரிய வைப்பேன்
          என் மூளைக்கு
இனி அவள் முத்தம்
        எனக்கில்லை என்று...!!!


How..?

How Can I Explain
           To my Brain
Rest of her Kisses is
         not to me...?

Sunday, 18 June 2017

Husband in Pregnancy


கர்ப்பத்தில் கணவனும்
கண்கள் குளமாயின
    இதழ்கள் மலராயின
          நாட்கள் தள்ளிப்போனது,
              என்ற ஒற்றை வார்த்தையில்..

வயிற்றில் நான் முத்தமிட
         உச்சந்தலையில் நீ முத்தமிட, 
               மறக்க முடியாத நிமிடங்கள் காலத்திற்கும்...

ஐந்தாம் மாதம்     
         குடம் தூக்க தடை ,  
ஆறாம் மாதம் 
        துணி துவைக்க தடை ,
இப்படி தடைகளாய் 
        என் பாசம் உன்மீது...

ஊர்கூடி வளையலிட்டு 
                 சீமந்தம் நடத்த ,
குழந்தையின் குரல் ஒலித்தது
                வளையல்கள் வழியாக...

விரல் கோர்த்து 
          மாலையில் நடக்க
"நீ இன்னும் அழகானாய் 
         தாய்மையில்....."

நான் தலையணையாகி 
              மார்போடு அணைக்க
உன் மூச்சுக்காற்றில் 
            மிதந்தது என் இதயம்....

விடாப்பிடியாய் மருத்துவர் 
           கைகளைப் பிரிக்க
தனியறையில் நீயும் 
         தனிமையில் நானும்......

விருந்தினர்க் கூட்டம்
              விழாக்கோலமிட
கண்கள் ரணமாயின
              உன் வலியில்....

இறுதியில் ஓர் அழுகுரல்
           நிம்மதி பிறந்தது எனக்கு
நம் இருவரும் ஒருசேர 
         குழந்தையை முத்தமிட
இருவீட்டு உறவினர் கூட்டம்
        மெதுவாய் கலைந்தது...

இந்த கணத்தை எதிர்பார்த்து
      நீ இதழ் பொருத்திய முத்தத்தில்
        அத்தனை வலிகளும் பறந்ததடி.!!!!!

Husband in Pregnancy


Eyes were Pond
       Lips were Flowers
             Days Passed in a Single Word...

I kiss in the stomach
         To kiss you on the scalp,
               That is memorable minutes of My life


Fifth Month      
         You banned to Lift a Jug  
Six Month
        You banned to washing the clothes
Am showed my love
        like this banning 

All together and conducted  
       a bangle function... 
We hear our Child's Voice 
      Through the bangles 

Fingers Jointed
        Walk in the evening
You're so Beautiful in motherhood

I become a Pillow
              and hold you in my chest
My little Heart Floating 
            in your Breathing Air ....

Doctor Separate our Hands Continuously,
You're in the Separate Room ,Am in Alone...

Relatives Together
       And made fun
But my eyes are Crying
     Due to your Pain...

Finally am hear one Crying Sound
           I feel Happy
We kissed our Baby Together
         Relatives are started to leaving

You are waiting for this Moment
      Then you kissed on my Lips
In that Kiss am forget all the Pain...


Sunday, 11 June 2017

Plastic Rice

Plastic Rice
The pain of farmer 😢😭
  Landed on Throat of Elite People ⚔
In the Name of Plastic Rice...🍕🍪
🌿🌱🌴🌳🍃🌾
தொண்டையில் இறங்கியது ⚔
         விவசாயியின் வலி 😢😭
மேல்தட்டு மக்களுக்கு 🏌🏂
         பிளாஸ்டிக் அரிசியாக...🍕🍪

Friday, 9 June 2017

Life inside a Bus

Life Inside A Bus

At last I caught a Window Seat
am Sit with her Memories...
That is my Regular way
So, I turned into Bus....

School Students hold their books
With Exam fear....
College Students Stands in very Style
With a Single Book...

Young Couples Speaks with their Eyes
Old Couples Speaks about their Love life

One beautiful newly Married Couple
Someone as a Joker for Someone's Child

Am seen a life between Baby to Old people inside a Same bus.


பேருந்தினுள் வாழ்க்கை

தேடிப்பிடித்து ஒருவழியாய் அமர்ந்தேன்
      ஜன்னலோரம் அவள் நினைவுகளுடன்
பழக்கப்பட்ட வழி என்பதால்
       பார்வையை திருப்பினேன் பேருந்துக்குள்...

பரீட்சை பயத்தில் புத்தகங்களை
      புரட்டிக்கொண்டே பள்ளி மாணவர்கள்
ஒற்றைப் புத்தகத்தை கெத்தாய்
      சுழட்டிக்கொண்டே கல்லூரி மாணவர்கள்...

திகட்டாத இளமைக் காதலில்
      கண்கள் பேசும் காதலர்கள்
இளமையை அசைபோட்ட படி
      நரைமுடி முதுமை காதலர்கள்....

கல்யாண கலை இழக்காத
     புதுமணத் தம்பதியர் அழகாக
யாரோ வைத்திருக்கும் குழந்தைக்கு
    நிமிடக் கோமாளியாய் ஒருத்தன்...

ஒட்டுமொத்த வாழ்க்கையும்
    ஒற்றைப் பேருந்தினுள் அடங்கியது...


ராட்சஷி

ராட்சஷி முத்தாய் தானடி உள்ளது உனக்கு மட்டும் அத்தனை பருக்களும்.....!!!! All the Pimples are Looking like Pea...