விழியில் விழுந்த பள்ளி
விரல் கோர்த்த வீதி
உடைகள் உரசிய பேருந்து நெரிசல்
கூந்தல் தீண்டிய சாளரம்
சேர்ந்து பார்த்த திருவிழா
ஒன்றாய் உண்ட உணவகம்
தேடித் திரிகிறேன்
எங்கே தொடங்கியது
நம் பிரிவின்
ஆரம்பப்புள்ளி.
நினைவுப் பெட்டகம் நிரம்பி வழிய அடுக்கடுக்காய் வந்து சேரட்டும் பேரழகியின் நாட்குறிப்பில் பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள் இன்று போல் என்றென்றும...
No comments:
Post a Comment