Monday, 13 January 2020

நான்‌ யார்.?

நான்‌ யார்.?
ஒவ்வொரு முறையும்
தோல்வியின் மேலே
அமர்ந்து அழகு பார்த்தவன்

காரணங்கள் தேடி பயணப்பட்டு
அதில்லை இதில்லை
என்றெண்ணி மீண்டும் சிம்மாசனமிட்டேன்
தோல்வியின் மீதே

என் வழியில் கண்ட
முள்ளுக்கு காக்கையை 
காரணம் கட்டி அசையாதிருந்தேன்
காலம் அப்படியன்று 
சுழன்று கொண்டேயிருந்தது

அருகே செல்பவன் 
கால்களை பார்த்து பொறாமைபட்டவன்
அவன் எதிர்கொண்ட முட்புதரைப் பார்க்கவேயில்லை

எதிர்பாரா தருணமொன்றில்
தேவதையாய் வந்திறங்கியவள்
அழகாய் சொல்லிச் சென்றாள்
உனக்கும் இரண்டு கைகளுண்டென..

ஆம் சொல்லிச் சென்றாள்




Wednesday, 8 January 2020

நீயறிவாயா?

நீயறிவாயா?
*******************

யாரிடமும் கேட்க வேண்டி‌யதில்லை
பழக்கப்பட்ட வழி தான்

எப்போதும் புன்னகைக்கும்
அந்த அண்ணனின் கடை திறந்திருந்ததா?

யாரிடமோ சத்தமாய் பேசும்
அந்த மாமா இன்று பேசிக்கொண்டிருந்தாரா?

உணவகத்தில் வேலையாளை அதட்டும்
அந்த முரட்டு முதலாளி இன்றிருந்தாரா?

வழக்கமாய் பூத்திருக்கும்
அந்த முதல் வீட்டு செம்பருத்தி இன்று பூத்திருந்ததா?

காலடி சத்தம் கேட்டதுமே குரைக்கும்
அந்த மூன்றாவது வீட்டு நாய் இன்று குரைத்ததா?

எதிரே சட்டென்று நிறுத்தி
அந்த ஓட்டுநர் திட்டும் வரை 
ஏதும் நினைவில் இல்லை
உன்னைத் தவிர

Monday, 6 January 2020

தேடல்

சுற்றி இருப்பதெல்லாம் 
விருப்பம் போல சுழன்று கொண்டிருக்க
விருப்பமின்றி மனம் தனித்திருக்கிறதே

எட்டும்‌ தூரத்தில் நீயில்லையே
கட்டியணைத்து சரிசெய்திருப்பேனே
உடைந்த நம்‌ இதயத்தை

மிச்சமிருந்த எச்ச நம்பிக்கையும்
சுக்கு நூறாகிறதே
உச்சென்ற உன் சுழிப்பிலே

எத்தனை தொலைவு செல்கிறேனோ
அத்தனை கனத்த இதயத்துடன் திரிகிறேன்
நீயில்லா உலகில்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு

வார்த்தைகள்  உணர்த்திடாது
என்‌ வலியை
வழித்தடம் தெரியாமல் கரைபுரளும்
கண்ணீர் தெரியும் தொலைவிலும் நீயில்லை

நினைவில் இருப்பதெல்லாம் ஒன்றே
 நீ மட்டுமே 
இத்தேடலின் முடிவு
நீயும் நினைவில் கொள்ளடி 

Sunday, 5 January 2020

வாய்ப்பு

ஒவ்வொரு வாய்ப்பிலும்
நீ கொண்ட நம்பிக்கையை  உடைத்து
இன்னும் தூரம் சென்று கொண்டேயிருக்கிறேன்

Saturday, 4 January 2020

என்னின் தவறுகள்

ஒவ்வொரு முறையும்
அவள் தேடி வரும் போது
என்னின் குறைகளெல்லாம்
இன்னும் தூரமாக்குகிறது
எங்களுக்கான இடைவெளியை

Wednesday, 1 January 2020

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

முடிவில்லா தேடலில்
முடிவாய் உன்னைத் தேடியே
இவ்வாண்டும்

Happy Birthday

 நினைவுப் பெட்டகம் நிரம்பி வழிய அடுக்கடுக்காய்  வந்து சேரட்டும் பேரழகியின் நாட்குறிப்பில்  பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள் இன்று போல் என்றென்றும...