Saturday, 10 September 2022

Friday, 9 September 2022

Wednesday, 7 September 2022

07.09.22

How did you do that to me?

07.09.22

 நம் பயணத்தின்
முதல் நிறுத்தம்
உனதானது

Wednesday, 2 March 2022

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தூரத்து நிலவை
சில நேரங்களில் கருமேகங்களுக்கு மத்தியில்
அவ்வப்போது முழுவதுமாக
திடீரென்று இல்லாமலே போய்விடும்
பல நேரங்களில் பாதியாக
இருந்தாலும் ரசிக்கத்தான் செய்கிறேன்
தூரத்தில் இருந்து

நீரில் மிதக்கும் பிம்பத்தை
நினைவுகள் சுமக்கும் பொழுதுகளை
மின்சாரம் தொலைத்த இரவுகளை
கடந்து கொண்டிருக்கிறேன்
தூரத்து நிலவை ரசித்துக்கொண்டே
தூரத்தில் இருந்து


நிலவுக்கு கேட்கப்போவதில்லை
மின்மினிகளின் கூப்பாடு
இருந்தாலும் தொடர்கிறது
என் வாழ்த்துக்களைப் போல

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Monday, 6 December 2021

தனியே

நினைவிருக்கிறதா?
இருண்ட உலகின்
மூலையில் ஒளிந்திருக்க
கண்சிமிட்டி
வெளிச்ச உலகைக் கொடுத்து
உன்னோடு
நடைபோட வைத்தாயே

தொலைந்து போன
நாட்கள் எல்லாம்
மீட்டுக் கொடுத்தாயே
இன்னிசையாய் மீட்டிக் கொடுத்தாயே

துயில் கலைந்த காலையாய்
திருப்பத்தில் பிரிந்த சாலையாய்
சட்டென்று விட்டாயே
மீண்டும் அந்த
இருள் சூழ் உலகின் மூலையில்

நொறுங்கி விழுந்து
உடைந்துச் சிதறி
கதறி அழுது
கத்தி அழைத்து
பதிலில்லா உலகில்
பரிதவித்து நின்றேனே
பாதியாகி நின்றேனே

அடைத்து வைத்த அறையின்
சாளரத்தின் வழி வந்த தென்றல்
குயில் குரல் தேடி
மயில் அழகைத் தேடி
கானகத்துள் இழுத்துச் செல்ல

ஆர்ப்பரிக்கும் அருவி
கொட்டும் மழை
கொந்தளிக்கும் கடல்
நீளும் மலை
நிசப்த இரவு
எண்ணிலடங்கா விண்மீன்
எத்திசையும் இயற்கை
பரந்து கிடக்க

நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
வளைந்து நெளிந்து
அமைதியாக
ஆற்று நதியாக
இயற்கையின் எச்சத்தையும்
எந்தன் மிச்சத்தையும் தேடி
தனியே ஓடிக்கொண்டிருக்கிறேன்

பயணங்களில் படித்திருக்கிறேன்
தொலைத்த ஒன்று
ஏதோ உருவில் வருமாம்

வரட்டும்
ஆனால்
அது ஏதோ ஓர் உருவாகவே இருக்கட்டும்

பயணங்கள்
பல மனிதரைக் கொடுத்தது
பாடம் கற்பித்தது
எல்லோருக்கும்
தனித்தனி நிறுத்தங்கள் தானே

உந்தன் நிறுத்தத்தில் சொல்லிக்கொண்டு இறங்கியிருக்காலாம்


எந்தன் நிறுத்தம் தேடி
பயணப்படுகிறேன்
பயணப்படுவேன்
தனியே


Happy Birthday

Niraya solanum But soldra nilamai la nanum  Ketkura nilamai la neeum ila nu ninaiken.... Life isn't easy without you Epothume santhosama...