Tuesday, 2 March 2021

என்னவளே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வார்த்தைகள் மௌனமாகி
விழித்திரையில் விழுந்து கிடக்க
நிரம்பி வழிந்தது காதல்

விழி எட்டா தூரத்தில்
குரல் மட்டும் கேட்க
ஆர்ப்பரித்து ஓடியது காதல்

இமை மறுத்து
வாய் பேசா வேளையிலும்
அட்சய பாத்திரமாய்
காதல் தருபவளே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Friday, 29 January 2021

நீயும் கனவும்

கனவுகள் நீளும் வரை
நினைவிற்கு முடிவில்லை

Friday, 1 January 2021

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்தனையோ கடந்த பின்னும்
கெட்டியாய் பிடித்துக் கொண்டது
உன் நினைவுகள்
இவ்வாண்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tuesday, 22 December 2020

Friday, 11 December 2020

ஆரம்பம்

தேடித் திரிகிறேன்
விழியில் விழுந்த பள்ளி
விரல் கோர்த்த வீதி
உடைகள் உரசிய பேருந்து நெரிசல்
கூந்தல் தீண்டிய சாளரம்
சேர்ந்து பார்த்த திருவிழா
ஒன்றாய் உண்ட உணவகம்
தேடித் திரிகிறேன்
எங்கே தொடங்கியது
நம் பிரிவின்
ஆரம்பப்புள்ளி.

Miss you

நினைவுகள்

அத்தனை
அழகிய நினைவுகளை
கொடுத்துவிட்டு
நீயும் ஏனடி
நினைவாகவேச் சென்றாய்

Happy Birthday

Niraya solanum But soldra nilamai la nanum  Ketkura nilamai la neeum ila nu ninaiken.... Life isn't easy without you Epothume santhosama...