Wednesday, 19 April 2023

உறக்கமில்லா இரவுகள்

தோற்றுப்போய் 
சராசரி ஆணாய்
வலி கூடி
வழி தொலைத்து
திக்கற்று நிற்கிறேன்

கையிருந்த வேலை இழந்து
கைக்கெட்டா தேர்வை இழந்து
கடைசி கையிருப்பும் இழந்து
கைகாட்டும் உன்னை இழந்து

அடுத்தென்னவெனும் கேள்விக்கு
முன்னே
கொஞ்சம் மடிசாய்கிறேன்
துப்பட்டா போர்த்திய
பேருந்தின் நினைவுகளுக்குள்

Sunday, 16 April 2023

சில

எல்லாம் விடுத்து
சில பக்கங்களை புரட்டி
சில புகைப்படங்களை நகர்த்தி
சில நினைவுகளை‌ மீட்டி
விழியில் நீர்‌ திரட்டி
உந்தன் நினைவோடு
மூழ்கி கிடப்பது பேரானந்தம் 

Tuesday, 11 April 2023

wanna go

If someone asked me
What you want now?
Me: A place where no one knows me,
       A place I don't know anyone.
Wanna live for me
With Nature
With travel
With strangers

Sunday, 2 April 2023

ibps po result

இன்னும் எத்தனை இரவுகள் தூக்கமின்றி நகரப் போகிறது
அந்த ஒற்றை மதிப்பெண்ணை நினைத்து 

Saturday, 1 April 2023

ibps po result

அத்தனை எளிதில் கடந்து செல்ல முடியாத நாள்... வெறும் 1 மதிப்பெண்ணில் மொத்த கனவுகளும் சுக்கு நூறாக உடைந்து விழ.. மொத்த குடும்பமும் கண்கலங்க இன்டர்வியூவில் 1 மதிப்பெண் அதிகம் போட்டிருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காதே என‌ எண்ணி அழ... கண்ணீரில் கரைகிறது.. 

Happy Birthday

 நினைவுப் பெட்டகம் நிரம்பி வழிய அடுக்கடுக்காய்  வந்து சேரட்டும் பேரழகியின் நாட்குறிப்பில்  பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள் இன்று போல் என்றென்றும...