வார்த்தைகள் மௌனமாகி
விழித்திரையில் விழுந்து கிடக்க
நிரம்பி வழிந்தது காதல்
விழி எட்டா தூரத்தில்
குரல் மட்டும் கேட்க
ஆர்ப்பரித்து ஓடியது காதல்
இமை மறுத்து
வாய் பேசா வேளையிலும்
அட்சய பாத்திரமாய்
காதல் தருபவளே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நினைவுப் பெட்டகம் நிரம்பி வழிய அடுக்கடுக்காய் வந்து சேரட்டும் பேரழகியின் நாட்குறிப்பில் பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள் இன்று போல் என்றென்றும...